Aadhaar Operator Supervisor Recruitment 2026: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் CSC இணைந்து இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள 252 ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Aadhaar Operator Supervisor Recruitment 2026 கல்வித் தகுதி
ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
12-ஆம் வகுப்பு (HSC/Intermediate): பள்ளிக்கல்வி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி.
10-ஆம் வகுப்பு + 2 வருட ITI: பத்தாம் வகுப்புடன் இரண்டு வருட தொழில்பயிற்சி (ITI) சான்றிதழ்.
10-ஆம் வகுப்பு + 3 வருட Diploma: பத்தாம் வகுப்புடன் மூன்று வருட தொழில்நுட்ப பட்டயப் படிப்பு (Polytechnic/Diploma).
UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
Aadhaar Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு 10.03.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். (அதிகபட்ச வயது வரம்பு கிடையாது).
Aadhaar Operator Supervisor Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.02.2026 முதல் 10.03.2026 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று சென்று உங்கள் மாநிலத்திற்கு நேராக இருக்க கூடிய Apply Now பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.