Customs Chennai Recruitment 2026

10வது பாஸ்…சென்னை சுங்கத் துறையில் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! Customs Chennai Recruitment 2026

Customs Chennai Recruitment 2026: சென்னை சுங்கத்துறையில் (Office of the Commissioner of Customs, General) காலியாக உள்ள Tradesman, Seaman மற்றும் Greaser உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு (SSLC) அல்லது ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை சிறந்த ஊதியம் வழங்கப்படும். மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.04.2026 முதல் 30.04.2026 வரை ஆன்லைன் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் Office of the Commissioner of Customs (General)
சுங்க ஆணையர் (பொது) அலுவலகம்
காலியிடங்கள் 10
பணிகள் Tradesman, Seaman மற்றும் Greaser
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 30.04.2026
பணியிடம் சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://chennaicustoms.gov.in/
பதவியின் பெயர் காலியிடங்கள்
Tradesman 02
Seaman 06
Greaser 02
பதவியின் பெயர் கல்வித் தகுதி & அனுபவம்
Tradesman 10-ஆம் வகுப்பு + ITI (Mechanic/Diesel/Fitter/Turner/Welder/Electrician/Instrumental/Carpentry) + 2 ஆண்டுகள் அனுபவம்
Seaman 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + கடலில் செல்லும் இயந்திரமயமாக்கப்பட்ட கலன்களில் 3 ஆண்டுகள் அனுபவம்
Greaser 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + இயந்திரப் பராமரிப்புப் பணியில் (Machinery Maintenance) 3 ஆண்டுகள் அனுபவம்

மத்திய அரசு சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *